ஈரானுடன் நாம் செய்துவரும் ஒப்பந்தமானது பராக் ஹுசைன் ஒபாமா மற்றும் தூக்கக்கலக்க ஜோ பைடன் எழுதிய, “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்” என்று பொதுவாக அழைக்கப்படும் JCPOA-வை விட மிகச் சிறந்ததாக இருக்கும். இது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது அணு ஆயுதத்தை நோக்கிய உறுதியான பாதையாக இருந்தது, ஆனால் நாம் பணியாற்றிவரும் ஒப்பந்தத்தின் மூலம் அது நடக்காது, நடக்க முடியாது. அவர்கள் உண்மையில் 1.7 பில்லியன் டாலர்களை “பச்சை” பணமாக, ஒரு போயிங் 757 விமானத்தில் ஏற்றி, ஈரானியத் தலைவர்கள் தங்களுக்குத் தோன்றியபடி செலவிடுவதற்காக ஈரானுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர். அவர் வாஷிங்டன் டி.சி., விர்ஜினியா மற்றும் மேரிலாந்து ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் இருந்த அனைத்துப் பணத்தையும் காலி செய்தார். முன்பு அதுபோன்ற எதையும் தாங்கள் பார்த்ததில்லை என்று அந்த வங்கி அதிகாரிகள் கூறினர். கூடுதலாக, நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஈரானுக்குச் செலுத்தப்பட்டன. நான் அந்த “ஒப்பந்தத்தை” ரத்து செய்யாவிட்டில், இஸ்ரேல் மீதும், நமது போற்றுதலுக்குரிய அமெரிக்க ராணுவத் தளங்கள் உட்பட மத்திய கிழக்கு முழுவதிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆபத்தானது என்றும் நமது நாட்டிற்கு முழுமையான அவமானம் என்றும் தெரிந்திருந்தும், லேசான வாஷிங்டன் போஸ்ட் “பத்திரிகையாளர்” டேவிட் இக்னேஷியஸ் போன்ற போலியான செய்திகள் JCPOA பற்றி பேச விரும்புகின்றன. “TRUMP” இன் கீழ் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், அது இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கிற்கும் மட்டுமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களுக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்யும். திறமையற்ற மற்றும் கோழைத்தனமான தலைமையின் காரணமாக நாம் அவதிப்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளான பல வருட அவமானம் மற்றும் தலைகுனிவுக்குப் பதிலாக, இது ஒட்டுமொத்த உலகமும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். தலைவர் டொனால்ட் ஜே. ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் வலைத்தளத்திலிருந்து வரவுகள்