கடந்த சில மாதங்களாக, லஹாவ் 433-இன் தேசிய தீவிரவாத நிதி எதிர்ப்புப் பிரிவு (NBCTF) பல நாணய மாற்று மையங்களுக்கு எதிராக, அவற்றில் சில உரிமம் பெறாதவை, பணமோசடி குற்றங்கள், உரிமமின்றி நிதி சேவைகளை நடத்துதல், கடுமையான சூழ்நிலைகளில் ஏமாற்றிப் பொருள் பெறுதல் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஷெக்கல்கள் மதிப்பிலான பயங்கரவாத நிதி உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரகசிய விசாரணையை நடத்தி வந்தது. குற்றங்களில் சில ஜோர்தானிய நாணய மாற்று மையத்திற்காகச் செய்யப்பட்டன. விசாரணையின் வெளிப்படையான கட்டத்திற்கு மாறியதும், தேசிய மோசடிப் பிரிவின் துப்பறிவாளர்கள், எல்லைக் காவல்துறை (மகாவ்) வீரர்களுடன் இணைந்து மற்றும் பொதுக் காப்பாளர் அலுவலகத்தின் பறிமுதல் பிரிவின் ஒத்துழைப்புடன், 14 சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்தி, தேடுதல்களை மேற்கொண்டு, சந்தேக நபர்களை விசாரனைக்காக தேசிய மோசடிப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். சோதனையின் போது, சுமார் 8 மில்லியன் ஷெக்கல்கள் மதிப்பிலான தங்கமும் நகைகளும், பல்வேறு நாணயங்களில் சுமார் 2 மில்லியன் ரொக்கப் பணமும், 7 சொத்துக்களும் மற்றும் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட சுமார் 22 மில்லியன் ஷெக்கல்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் மேலும் பல விசாரணை நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.