நான் மிகவும் விரும்பும் மற்றும் 2016, 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பெரிய வெற்றியைப் பெற்ற கான்சாஸ் மாநிலத்தின் அடுத்த ஆளுநராகப் போட்டியிடும் ஒரு அருமையான வேட்பாளரான டை மாஸ்டர்சனை ஆதரிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! கான்சாஸில் உள்ள பல அமெரிக்கா ஃபர்ஸ்ட் தேசப்பக்தலாளர்களுடன் இணைந்து அவரை உறுதியாக நம்பும் எனது நண்பரான, அமெரிக்காவின் மாண்புமிகு செனட்டர் ரோஜர் மார்ஷலுடன் இணைந்து டை குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார். மிகுந்த வெற்றி பெற்ற சிறு வணிக உரிமையாளரும் தொழில்முனைவோருமான, கான்சாஸின் மிகவும் பிரபலமான மாநில செனட் தலைவர் டை, தனது சமூகத்திற்குச் சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். உங்கள் அடுத்த ஆளுநராக, கான்சாஸ் மாகாணத்தின் விளிசைகளைக் காக்கவும், எங்களது அற்புதமான விவசாயிகளையும் கால்நடை வளர்ப்போரையும் மேம்படுத்தவும், எங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும், வரிகளையும் விதிமுறைகளையும் குறைக்கவும, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதை முன்னெடுக்கவும், அமெரிக்க எரிசக்தி ஆதிக்கத்தை கட்டவிழ்த்துவிடவும், எங்கள் எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், புலம்பெயர்ந்தோர் குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், எங்களது துணிச்சலான ராணுவம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தினரை ஆதரிக்கவும், எங்கள் தேர்தல்களைப் பாதுகாக்கவும், எப்போதும் முற்றுகைக்குள்ளான இரண்டாவது திருத்தத்தைக் காக்கவும் டை அயராது உழைப்பார். கான்சாஸ் மாநிலத்தின் அடுத்த ஆளுநராக ஆவதற்கு டை மாஸ்டர்சனுக்கு எனது முழுமையான மற்றும் மொத்த ஆதரவு உள்ளது – அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்!

Credits from Donald Trump Truth Social Network