இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கடந்த வாரத்தில் காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி, காசா முனையில் செயற்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளைக் கொன்றது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்:* வாவில் முகமது அலி லபாத் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவப் பிரிவின் எதிர்-டாங்குக் செயற்பாட்டாளர்* மெவாஸ் முகமது ஹசன் அகமது – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவப் பிரிவின் எதிர்-டாங்குக் செயற்பாட்டாளர்* சாமேக் அபு கமில் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவப் பிரிவின் பிரிவுத் தளபதி* அக்ரம் அஷ்ரப் ஹமாத் லபாத் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவப் பிரிவின் துப்பாக்கிச்சுடும் செயற்பாட்டாளர்மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மற்றும் இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீதான பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளுக்காக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் பயன்படுத்தப்பட்ட ஏவுதள சுரங்கங்களையும் ஏவுதளங்களையும் முன்தினம் (திங்கட்கிழமை) இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்கி அழித்தது. தெற்குக் கட்டளைப் பீடத்தின் கீழ் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைப் பிரிவுகள் உடன்படிக்கையின்படி அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்ற தொடர்ந்து செயற்படும்.