ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர்:
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் பிளட்டூன் தளபதியுடன் மேலும் பல பயங்கரவாதிகள்: நிவாரணப் பணியாளர்களாகக் காட்டப்பட்ட பயங்கரவாதிகளை வெளிப்படுத்துகிறது ஐடிஎஃப்.
நேற்று (சனிக்கிழமை) வடக்கு காசா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக, மூன்று பயங்கரவாதிகள் நிவாரணப் பணியாளர்களாகத் தவறாக சித்தரிக்கப்பட்ட நிலையில், ஐடிஎஃப் தற்போது அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துகிறது: பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் பொறியியல் பிரிவின் பிளட்டூன் தளபதியான அஹ்மத் பத்ரான் நிம்ர் சுவாஃபீரி, மற்றும் அவருடன் தாக்கத்திற்குள்ளான மற்ற இரண்டு பயங்கரவாதிகளான முஸ்தபா யூசுப் முஸ்தபா ரஃபாஈ மற்றும் காலத் ஆவத் ஃபத்தி நயீம் ஆவர்.
அவர்கள் தாக்கப்பட்டபோது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள செயல்பாட்டு நிலைகளுக்கு இடையே அப்பயங்கரவாதிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இப்பயங்கரவாதிகளில் ஒருவர் முன்பு சர்வதேச மனிதாபிமான நிவாரண அமைப்பு ஒன்றில் பணியாற்றியவர். அவர் ஒரு பயங்கரவாதி என்று ஐடிஎஃப் அந்த அமைப்புக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
போர் நெடுகிலும், குறிப்பாக அண்மைக்காலமாகவும், இப்பயங்கரவாதிகள் ஐடிஎஃப் படைகளுக்கும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் எதிராகப் பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுத்ததோடு, போர்நிறுத்தத்தை முறையாக மீறி, காசா பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் திறன்களை மீண்டும் கட்டமைக்கச் செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றும் நோக்கில், அப்பயங்கரவாதிகள் மீது வான்வழியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி அப்பகுதியில் ஐடிஎஃப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன; மேலும் உடனடி அச்சுறுத்தல்கள் எதையும் அகற்றுவதற்கு அவை தொடர்ந்து செயல்படும்.




