ஜெருசலேம், 16 செப்டம்பர், 2026 (TPS-IL) — குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்தவரும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவருமான கனடா யூதரான 31 வயதான பென் ஹசின், மரண தண்டனையிலிருந்து நூழிலையில் தப்ப11 ஆண்டுகளுக்குப் பிறகு குர்திஸ்தானில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இடையே கடந்த ஆண்டு எட்டப்பட்ட சமரசப் (“sulha”) ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரு குர்திஷ் மனிதரின் மரணத்திற்குக் காரணமானதற்காக ஹசின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் வரும் நாட்களில் இஸ்ரேல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது விடுதலையை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகள் வழக்கறிஞர் ஆலன் லவி மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெர்ஷல் குட்பிரவுண்ட், ஷிமோன் ரெல்னிட்ஸ்கி, மீர் ட்ச்வி டூபர், மற்றும் ஷெலோமோ லண்டௌ உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

அசல் வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் சமரசத்தின் நிபந்தனைகள் குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.