இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னதாக, அல் கசிர் பகுதியில் போ நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, முன்னரங்கு பாதுகாப்புக்கோட்டைக் கடந்து, படைகளுக்கு அருகில் வந்து உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய பயங்கரவாதிகளைப் படைகள் கண்டறிந்தன. நேற்று (திங்கட்கிழமை) மாலையில் அதே பகுதியில் நடந்த வேறு இரண்டு சம்பவங்களில், முன்னரங்கு பாதுகாப்புக்கோட்டைக் கடந்து படைகளுக்கு அருகில் வந்து உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டனர். அனைத்துச் சம்பவங்களிலும், அச்சுறுத்தலை அகற்றும் நோக்கத்துடன் வான்வழிப் படை பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கும் அதன் படைகளுக்கும் எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் அகற்றுவதற்கும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தொடர்ந்து செயல்படும்.
போ நிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நமது படைகளுக்கு உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஒழித்துக் கட்டியது…
முந்தைய செய்திகள்
- இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உடனடித் தாக்குதல்களைத் திட்டமிட்ட ஹமாஸ் பயங்கரவாத
- கடந்த 24 மணி நேரத்தில், தெற்கு லெபனானில் மஞ்சள் கோட்டிற்கு தெற்கே செயல்படும் இஸ்ரேலிய
- யூதேயாப் பிராந்தியத்திலுள்ள நகோஹோட் குடியிருப்பில் பயங்கரவாதி ஊடுருவியதாக அச்சம்
- லெபனானில் சிலுவையை அவமதித்த இஸ்ரேலிய வீரருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை



