இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) நேற்று (திங்கட்கிழமை) கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவின்ப்படைத் தளபதியான ரஃபத் அபு ஜமரை கொன்றழித்தது. அந்தப் பயங்கரவாதி அக்டோபர் 7 படுகொலைக்குத் தயாராகும் வகையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குப் பயிற்சிகளை முன்னெடுத்து வழங்கியதுடன், அண்மைக் காலமாக அமைப்பின் சண்டைத்திறன்களைத் தொடர்ந்து பயிற்றுவித்து மேம்படுத்தியும் வந்தார். காசா நகரில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவின் செயற்பாட்டாளரான முஹம்மத் கதர் ஃபஹ்மி அஜூரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கொன்றழித்தது. அப் பயங்கரவாதி அமைப்புக்கான ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அண்மைக் காலத்தில் அப் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) மற்றும் இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீதான பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுத்ததுடன், போர்நிறுத்தத்தை முறையாக மீறி அமைப்பின் திறன்களை மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை அகற்றும் நோக்கிலேயே அப் பயங்கரவாதிகள் கொன்றழிக்கப்பட்டனர். தாக்குதல்களுக்கு முன்னரும் அவற்றின் பொழுதும், துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வான்வழி மேற்பார்வை செய்தல் உள்ளிட்ட, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தெற்குப் பிராந்தியக் கட்டளைமையத்தின் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) பிரிவினர் உடன்படிக்கைக்கு இணங்கப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்றுவதற்காகத் தொடர்ந்து செயல்படுவார்கள்.