இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர்: பயங்கரவாதிகள் உள்ளிருந்து செயல்பட்ட போது: காசா நகரில் ஹமாஸின் ஆயுத உற்பத்தி தளத்தை இஸ்ரேல் ராணுவம் அழித்தது. இஸ்ரேல் ராணுவம் சற்று முன்பு காசா நகரப் பகுதியில் தாக்குதல் நடத்தி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுத உற்பத்தி தளத்தை அழித்தது. கடந்த காலப் பகுதி முழுவதும் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மாறாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதக் கூறுகளின் உற்பதிக்காக அந்தத் தளத்திற்குள்ளிருந்து செயல்பட்டு அமைப்பின் திறன்களை மீட்டெடுக்க முயன்றனர். இஸ்ரேல் ராணுவப் படைகள் மற்றும் இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீது பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் அதற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது அந்த உற்பத்தித் தளம் தாக்கப்பட்டப்பட்டது. தெற்குப் பிராந்தியக் கட்டளைமையத்தின் இஸ்ரேல் ராணுவப் படைகள் ஒப்பந்தத்திற்கு ஏற்பப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்றுவதற்காகத் தொடர்ந்து செயல்படும்.
பயங்கரவாதிகள் உள்ளிருந்து செயல்பட்ட போது: காசா நகரில் ஹமாஸின் ஆயுத உற்பத்தி தளத்தைத் தகர்த்தது இஸ்ரேல் ராணுவம்
போ நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாதிகள் உள்ளிருந்து செயல்பட்ட நிலையில், காசா நகரில் ஹமாஸின் ஆயுத உற்பத்தி தளத்தை இஸ்ரேல் ராணுவம் அழித்தது.
பகிர்கமுந்தைய செய்திகள்
- ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கடல்சார் பிரிவின் படைப்பிரிவுத் தளபதி மற்றும் மூன்று ஆயுதம்
- காசா மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் பயிற்சிப் பிரிவு தளபதியை கொன்றதாக
- யூதேயா மற்றும் சமாரியா மாவட்டக் காவல்துறை புலனாய்வு வழிகாட்டுதலின்படி
- ஹமாஸ் தளபதிகள் இருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது



