பாதுகாப்புப் படையினரின் கூட்டுத் தேடுதல் வேட்டையின் முடிவில், பக்கா மற்றும் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் உள்ள ஓஜா பகுதியில் கத்திக் குத்துத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதச் சந்தேக நபரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைப் படையினர் கைது செய்தனர். தேடுதல் வேட்டியின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மற்றும் ஷின் பெட் அமைப்புகளின் உளவுத்துறை வழிகாட்டுதல் மற்றும் சாதனங்கள் மூலம் சந்தேக நபரின் கைது சாத்தியமானது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் அல்லது தாக்க முயலும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் எதிராகப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள். சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காகப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.