இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) தெற்குப் பிராந்தியக் கட்டளைத் தளத்தின் கீழ் உள்ள படைகள் நேற்று புதன்கிழமை இரவு, காசா முனையின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளுக்கு அருகில் செயல்பட்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பல ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளைக் கண்டறிந்தன. இவர்கள் ஒப்பந்தத்தின்படி மஞ்சள் கோட்டுப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள IDF படைகளுக்கு அருகில் இருந்தனர்.

கண்டறியப்பட்ட உடனேயே, நமது படைகளுக்கு இருந்த அச்சுறுத்தலை நீக்கும் நோக்கில் அந்தப் பயங்கரவாதிகள் மீது வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இன்று வியாழக்கிழமை முந்தைய மற்றொரு நிகழ்வில், காசா முனையின் தெற்கே செயல்பட்டு படைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்களைக் கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாகு்தலில் பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தாக்குதல்களுக்கு முன்னதாக, துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வான்வழி கண்காணிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தெற்குப் பிராந்தியக் கட்டளையின் கீழ் உள்ள IDF படைகள் ஒப்பந்தத்திற்கு இணங்க அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்ற தொடர்ந்து செயல்படும்.