இஸ்ரேல் ராணுவமும் ஷின் பெட்டும் நேற்று (வியாழக்கிழமை) கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ரஃபா பிரிகேட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சூடு பிரிவுத் தளபதியான முவாமின் ஜாபர் அல்-சயீத் அபு லப்தா என்ற பயங்கரவதியைக் கொன்றன.

இந்தப் பயங்கரவாதி காசா முனையில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு, இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீதும் மஞ்சள் கோட்டுப் பகுதியில் செயல்படும் இஸ்ரேல் ராணுவப் படைகள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றார். கடந்த காலத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாக மீறி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் திறன்களை மீட்டெடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அச்சுறுத்தலை அகற்றுவதற்காக அந்தப் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

தென் பிராந்தியக் கட்டளையின் கீழ் உள்ள இஸ்ரேல் ராணுவப் படைகள் ஒப்பந்தத்திற்கு இணங்க இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு, உடனடி அச்சுறுத்தல்கள் அனைத்தையும் அகற்றத் தொடர்ந்து செயல்படும்.