தெற்கு லெபனானில் உள்ள அன்சார் பகுதியில் ஹிஸ்புத் தீவிரவாத அமைப்பின் மத்திய தலைமையகம் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்புப் பகுதியில் செயல்படும் நமது படைகளுக்கு எதிராக ஹிஸ்புத் தீவிரவாத அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதியில் நடவடிக்கைகளை நிர்வகிக்க இந்தத் தலைமையகத்தை ஹிஸ்புத் தீவிரவாத அமைப்பு பயன்படுத்தி வந்தது. இந்தத் தாக்குதலில், ஹிஸ்புத் தீவிரவாத அமைப்பின் ‘ரத்வான் படை’ பிரிவின் பட்டாளத் தளபதியான அலி சமீர் அல்-ஹாஜ் ஹசன் கொல்லப்பட்டார். அவருடன் இணைந்து, பாதுகாப்புப் பகுதியில் செயல்படும் ஐடிஎஃப் படைகளுக்கு எதிராகத் தீவிரவாதத் திட்டங்களை முன்னெடுத்து வந்த பல தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதலின் போது, ஹசனின் குடும்பத்தினரும் அந்த ராணுவத் தலைமையகத்தில் அவனுடன் இருந்தனர், மேலும் அத்தாக்தலில் அவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தாக்குதலின் இலக்கு அல்ல என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. சர்வதேச சட்டங்களின்படி தாக்குதலுக்குள்ளான சட்டப்பூர்வ இலக்காக இருந்த ஹசனை மட்டுமே குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தீவிரவாதி தனது குடும்பத்தினரை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்தி, அவர்களுடன் ராணுவத் தலைமையகத்திற்குள் பதுங்கியிருந்தான். இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீதும் தனது படைகள் மீதும் ஹிஸ்புத் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த ஐடிஎஃப் அனுமதிக்காது, மேலும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.