
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினர் மீதான கொடூரத் தாக்குதலுக்கு ஹிஸ்புத்லா காரணம் என இஸ்ரேல் குற்றச்சாட்டு
தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஹிஸ்புத்லா அமைப்பே காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதில் பிரெஞ்சுப் படைவீரர் சியார்ஜன்ட் ஃப்ளோரியன் மோன்டோரியோ கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.


