ஜெருசலேம், 16 ஏப்ரல், 2026 (TPS-IL) — இஸ்ரேல் நாட்டின் பகுதிக்குள் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தை, இரவில் இஸ்ரேல் கடற்படை ஏவுகணை கப்பலில் இருந்த போர் வீரர்கள் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் பிப்ரவரி 28 அன்று தொடங்கியதிலிருந்து இன்று வரை, இஸ்ரேல் நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும் வகையில் இஸ்ரேலின் ஏவுகணை கப்பல்கள் சுமார் 40 சம்பவங்களில் பங்கேற்றுள்ளன. இச்சம்பவங்களின் போது, இஸ்ரேல் நாட்டு குடிமக்களை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை அக் கப்பல்கள் கண்டறிந்து இடைமறித்து அழிக்கின்றன.


