புதிதாக எட்டப்பட்ட லெபனான் ஒப்பந்தத்தை இஸ்ரேலுக்கு ஒரு “பெரிய சாதனை” என்று வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான அடி என்றும், ஹிஸ்புல்லா முழுமையாக நிராயுதபாணியாக்கப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனான் பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

வாஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒப்பந்தத்தில் பிரதிநிதிகள் கையெழுத்திட்டபோது எருசலேமில் பேசிய நெதன்யாகு, எல்லைப் பகுதியில் ஈரானும் அதன் பினாமிகளும் செல்வாக்கு செலுத்துவதை இந்த ஒப்பந்தம் திறம்பட நீக்குகிறது என்பதை வலியுறுத்தினார்.

“அடிப்படையில் இஸ்ரேல், லெபனான் மற்றும் அமெரிக்கா அவர்களுக்குச் சொல்கின்றன: இது உங்கள் காரியம் அல்ல,” என்று யூத சபத் நாளுக்கு முந்தைய அறிக்கையில் நெதன்யாகு கூறினார். “தெற்கு லெபனானில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை – உங்களற்கோ, ஹிஸ்புல்லாவுக்கோ அல்லது வேறு எந்தத் பயங்கரவாத அமைப்புக்கோ எந்தப் பங்கும் இல்லை.”