ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது, வழக்கம்போல இது மாபெரும் அமெரிக்க நிறுவனங்களை நேரடியாகக் குறிவைக்கிறது! எந்தவொரு காரணமுமின்றி ஆப்பிள் நிறுவனத்திற்கு 15 பில்லியன் டாலர்களும், மெட்டா நிறுவனத்திற்கு 3 பில்லியன் டாலர்களும், அமேசான் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டாலர்களும் மற்றும் பல நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, உண்மையிலேயே மேம்பட்ட மற்றும் வியக்கத்தக்க குழுவான கூகுளுக்கு எந்தவொரு விளக்கமும் இல்லாமல் மேலும் 1 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுளுக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதம் 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாகியுள்ளது! சட்டவிரோதமான மற்றும் மிகவும் பாகுபாடான இந்த நடைமுறை, தூக்கக்கலக்க ஜோ பைடன் நிர்வாகத்தின் முதல் ஆண்டில்தான் இந்த உயர் மட்டங்களில் தொடங்கியது, ஆனால் இது டிரம்ப் நிர்வாகத்தின் போது தொடரப் போகாது. அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவிற்கு ஒரு “உண்டியல்” அல்ல, அவ்வாறு இருக்கவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! அமெரிக்க நிறுவனங்களையும், அதன் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோரையும்கொள்ளையடிக்கும் இந்த நடைமுறைமீது உடனடியாக 301-வது பிரிவு விசாரணையைத் தொடங்குவோம் என்பதை உணர்த்துவதற்காக இந்த உண்மைச் செய்தி அமைகட்டும். ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சட்டவிரோதமான மற்றும் மிகவும் நெறிமுறையற்ற செயலுக்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்கும், இதுகுறித்து நான் தொடர்ந்து அவர்களுக்கு எச்சரித்து வந்துள்ளேன். அபராதங்கள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும், மேலும் மிக விரைவில் அவர்கள் மீது கணிசமான சுங்கவரி விதிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். காத்திருங்கள்! அதிபர் டொனால்டு ஜே. டிரம்ப்
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது, வழக்கம்போல இது மாபெரும் அமெரிக்க நிறுவனங்களை நேரடியாகக் குறிவைக்கிறது!
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்ததற்காக ஐரோப்பிய ஒன்றியம் மீது 301-வது பிரிவு விசாரணையத் தொடங்கி வரிவிதிக்கப் போவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

