இஸ்ரேலிய பாதுகாப்புப் படை முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதியான அடம் முகம்மது இப்ராகிம் அபு ஹுடைதைக் கொன்றது. அவர் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத பயங்கரவாத அமைப்பின் உற்பத்திப் பிரிவின் தளபதியாவார். உற்பத்திப் பிரிவானது அமைப்பின் ராணுவப் பகுதிக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் தயாரித்து வழங்குவதற்குப் பொறுப்பாகும்.

அபு ஹுடைத் உற்பத்திப் பிரிவில் பல்வேறு செயல்முறைகளில் பங்கேற்றார். அவர் தலைமையேற்ற உள்கட்டமைப்பு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இஸ்ரேல் நாட்டு குடிமக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்காகக் கூடுதல் ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

அந்தப் பயங்கரவாதி படைகளுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்ததால், துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டார். தெற்குப் பிராந்தியக் கட்டளைமையத்தின் தலைமையின் கீழ் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைப் பிரிவுகள் ஒப்பந்தத்தின்படி அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு, எந்தவொரு அச்சுறுத்தலையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.