இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) காசா முனையின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தி, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பில் துப்பாக்கி சுடும் வீரராகப் பணியாற்றிய மாம் கமிஸ் அக்காஷா அபு பாரிக் என்ற பயங்கரவதியைக் கொன்றது. கடந்த காலத்தில், காசா முனையில் செயற்படும் இஸ்ரேல் ராணுவப் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தும் திட்டங்களை முன்னெடுக்க இப்பயங்கரவாதி செயற்பட்டார்.
காசா முனையின் வட பகுதியில் நேற்று நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஒபரேஷன்ஸ் தலைமையகத்தின் பிரிவுத் தலைவர் முஹம்மத் தைசிர் அஹ்மத் ஒபெய்ட் என்ற பயங்கரவதியை இஸ்ரேல் ராணுவம் கொன்றது.
போர் முழுவதும், இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவப் படைகளுக்கு எதிரான பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுக்க இப்பயங்கரவாதி செயற்பட்டார்.
இப்பயங்கரவாதிகள் அப்பகுதியில் செயற்படும் நமது படைகளுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்தனர் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
தென் பிராந்திய கட்டளைமையத்தின் இஸ்ரேல் ராணுவப் படைகள் ஒப்பந்தத்திற்கு இணங்க அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன மற்றும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்ற தொடர்ந்து செயற்படும்.