இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) மற்றும் ஷின் பெட் செய்திப்பிரிவு கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் ஷின் பெட் அமைப்பினரும் தெற்கு காசா முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் (PIJ) பயங்கரவாத அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்த தላል ஜாபர் முகம்மது அப்தெல்அல் என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டார். அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து படுகொலையில் பங்கேற்ற பயங்கரவாதக் குழுவை அப்தெல்அல் வழிநடத்தினார். போர் முழுவதும், தெற்கு காசா முனையில் பிஐஜே பயங்கரவாத அமைப்பின் வசமிருந்த பணயக்கைதிகளைப் பாதுகாத்து வைத்திருப்பதில் அப்தெல்அல் ஈடுபட்டிருந்தார். தெற்குப் பிராந்தியக் கட்டளைமையத்தின் கீழ் செயல்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் ஒப்பந்தத்திற்கேற்ப அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.