இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கடந்த 24 மணி நேரத்தில் லெபனானின் டயர், பெக்கா மற்றும் தெற்கு லெபனான் ஆகிய பகுதிகளில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் 135-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
பெக்கா மற்றும் தெற்கு லெபனானில், நமது படைகள் மற்றும் இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீது ராக்கெட்டுகளை வீச பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட சுமார் 10 ஏவுதளங்கள் தாக்கபட்டன. மேலும், பெக்கா பிராந்தியத்தில் உள்ள பீடரல் பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று தாக்கப்பட்டது.
கூடுதலாக, இரவின் போது, டயர் பிராந்தியத்தில் பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட தோராயமாக 15 ராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. மேலும், நமது படைகள் மீது ராக்கெட்டுகளை ஏவ பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட ஏவுதளத்திலிருந்து வெளியேறிய பயங்கரவாதக் குழுவை விமானப் படை அழித்தது.