இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர்: இன்று முற்பகல் (சனிக்கிழமை), இஸ்ரேலியக் குடிமகன் மீது பாலஸ்தீனர்கள் சிலர் கற்களை வீசியதாக வந்த தகவலை அடுத்து, பியாமின் பிரிகேடிற்க்கு உட்பட்ட டீர் ஜரிர் கிராமப் பகுதிக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வீரர்கள் விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு வந்தபோது, அவர்கள் மீது கற்களை வீசுவது உள்ளிட்ட கலவரம் வெடித்தது தெரியவருகிறது. ரிசர்வ் படை வீரர், காற்றில் சுடுவது மற்றும் அதனைத் தொடர்ந்து கல் வீச்சாளர்களில் ஒருவர் மீது சுடுவது உள்ளிட்ட சந்தேக நபரை கைது செய்யும் நடைமுறையை மேற்கொண்டார். சந்தேக நபர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவரங்கள் உரிய அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.