பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத என்ற பயங்கரவாத அமைப்பின் செயற்பாட்டாளரான தலாஸ் ஜாபர் முகமது அபேத் அல்-ஆல் என்பவர் ஞாயிற்றுக்கிழன்று தெற்கு காசா மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பும் (ஷின் பெட்) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) கூற்றுப்படி, அல்-ஆல் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து அக்டோபர் 7 படுகொலையில் பங்கெடுத்த பயங்கரவாதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவிற்குத் தலைமையேற்றுள்ளார்.
இந்தப் போர் முழுவதும், தெற்கு காசாவில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாதின் காவலில் இருந்த பணயக்கைதிகளைப் பாதுகாப்பதில் அல்-ஆல் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தென் பிராந்தியப் கட்டளைப் பிரிவின் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைப் பிரிவுகள் ஒப்பந்தத்திற்கு இணங்க அந்தப் பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன மற்றும் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.