ஜெருசலேம், 16 செப்டம்பர், 2026 (TPS-IL) — வெனிஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் பரிை வென்ற “NZA” ஆவணப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள கவனம் சமீப நாட்கலில் அதிகரித்துள்ளது. இதற்கு இஸ்ரேலின் கடுமையான எதிர்வினையே முக்கிய காரணம் என்று தூதரக வட்டாரங்களும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளன.
தொடக்கத்தில் திரைப்பட விழாவில் கலந்துகொண்டவர்களிடம் குறைந்த அளவிலான வரவேற்பையே பெற்ற இப்படம், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கலாச்சார அமைச்சர் மிக்கி சோஹர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கவிர் உள்ளிட்ட அதிகாரிகள் இதனைப் பகிரங்கமாகக் கண்டித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து முக்கிய சர்வதேசச் செய்தியானது.
திரைப்படத்தை விட அதன் மீதான எதிர்ப்பே உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததாக வெளிநாட்டுத் தூதர்கள் தெரிவித்தனர். தி நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் சுட்துயிட்சே சைடுங், பிரிட்டனின் டைம்ஸ் மற்றும் டெலிகிராப் உள்ளிட்ட ஊடகங்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களான யுவால் அப்ராஹம் மற்றும் ரச்சல் ஸோர் மீது குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மற்றும் “யூத விரோதத் தூண்டுதல்” குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பின.
காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் (IDF) நடத்தை குறித்த திரைப்படத்தின் சித்தரிப்பை நிராகரிக்கும் செய்திகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகமும் இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் பிரிவும் தூதரகங்களுக்குப் பரப்பி வருகின்றன.